TNPSC Thervupettagam

ஜோய் கோஷ்வாமி – மூர்த்திதேவி விருது 2017

December 22 , 2017 2531 days 929 0
  • புகழ்பெற்ற பெங்காளி கவிஞரான ஜோய் கோஷ்வாமிக்கு 2017ஆம் ஆண்டிற்கான 31வது மூர்த்திதேவி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதினை பெறும் முதல் பெங்காலி கவிஞர் இவரேயாவார்.
  • அனந்த புரஸ்கார், கேந்திரியா மற்றும் வங்காள சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றுள்ள இவர் முதல் டாட்டா வாழும் இலக்கிய கவிஞர் விருதையும் பெற்றுள்ளார்.
  • தன் செல்ல வளர்ப்பு பூனை உட்பட தன் வாழ்வின் நெருக்கமானவர்களை பாத்திரமாக்கி இவர் படைத்த வாழ்க்கை சுயசரிதையான “டு டோன்டோ போவாரா மாட்ரோ“ எனும் கவிதை தொகுப்பிற்காக கோஷ்ஸ்வாமிக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
மூர்த்தி தேவி விருது
  • வாழ்வை ஆட்கொள்ளும் சிந்தனைகள் மற்றும் பகுத்தறிவு கொண்ட இலக்கிய வேலைப்பாடுகளை (Contemplative and Perceptive work) படைக்கும் ஆசிரியர்களுக்கு இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பாரதீய ஞானபீட அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய இலக்கிய விருதே மூர்த்தி தேவி விருதாகும்.
  • இந்திய மொழிகளில் எழுதும் இந்திய இலக்கியவாதிகளுக்கு அவர்களின் சிறந்த படைப்பிற்காக இவ்விருது வழங்கப் பெறுகிறது.
  • பட்டாமாஹாதேவி சாந்தாலா தேவி எனும் நாவலுக்காக கன்னட எழுத்தாளரான C.K.நாகராஜராவிற்கு முதன் முதலாக 1983ல் இவ்விருது வழங்கப்பட்டது.
  • சரஸ்வதி சிலையும், சான்றுப் பதக்கமும், 4 லட்ச ரூபாய் ரொக்கமும் இவ்விருதில் வழங்கப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்