2025 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் தேசியக் கையெழுத்துப் பிரதி திட்டத்தின் (NMM) கீழ் 'ஞான் பாரதம் திட்டம்' சேர்க்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் கையெழுத்துப் பிரதிகளின் மரபு குறித்த கணக்கெடுப்பு/ஆய்வு, ஆவணப்படுத்தல் மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு சிறப்புத் திட்டமாகும்.
'ஞான் பாரதம் திட்டம்' ஆனது கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் தனியார் சேகரிப்பாளர்களிடம் உள்ள இந்தியாவின் கையெழுத்துப் பிரதி மரபுகளின் "கணக்கெடுப்பு, ஆவணப்படுத்தல் மற்றும் பாதுகாப்பை" மேற்கொள்ளச் செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
தற்போது, NMM ஆனது இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தின் ஒரு பகுதியாக உள்ளது.