ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் (induction Ceremony) புதுப்பிக்கப்பட்ட டக்கோட்டா வானூர்தியானது இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டது.
சிறப்புமிக்க சேவை சாதனைக்குப் (Illustious Service Record) பிறகு விலக்கிக் கொள்ளப்பட்ட இந்த டக்கோட்டா DC – 3 VP 905 வானூர்தி விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இந்த டக்கோட்டா வானூர்திக்கு பரசுராமா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினரான ராஜீவ் சந்திர சேகரிடமிருந்து நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில் டக்கோட்டா வானூர்தியை விமானப்படைத் தளபதி பெற்றுக் கொண்டார்.
இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்ட முதல் மிகப்பெரிய போக்குவரத்து வானூர்தியான டக்கோட்டா, கூனி பறவை எனவும் பிரபலமாக அழைக்கப்படுகிறது.
இந்த டக்கோட்டா வானூர்தி 1947 முதல் 1971 வரையிலான காலகட்டத்தில் விமான நடவடிக்கையில் முன்னணியில் இருந்தது. இவ்வானூர்தி 1947 ஆம் ஆண்டின் போரின் போது காஷ்மீர் நடவடிக்கைகளிலும் (Kashmir Operations) வங்கதேசப் போரிலும் முக்கியப் பங்கு வகித்தது.
1971 ஆம் ஆண்டிற்குப் பிறகு டக்கோட்டாவிற்குப் பதிலாக ஆவ்ரோ HS-748 (Avro HS-748) இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.