TNPSC Thervupettagam

டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் மறு மதிப்பாய்வு

December 27 , 2024 17 days 81 0
  • மத்திய சுரங்க அமைச்சகம் ஆனது, அரிட்டாப்பட்டியில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் கனிமத் தொகுதி குறித்த மறு மதிப்பு ஆய்வினை மேற்கொள்ளுமாறு இந்தியப் புவியியல் ஆய்வு மையத்திடம் (GSI) கோரி உள்ளது.
  • கனிம சுரங்கத் தொகுதியில் இருந்து மாநிலத்தின் முதல் உயிரியல் பன்முகத்தன்மை மிகுந்த தளத்தை விலக்கி அதன் எல்லையை மறுவரையறை செய்வதற்கான பெரும் சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு அது கோரியுள்ளது.
  • அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைகளில், சுமார் 250 பறவை இனங்கள் காணப் படுவதால், அவை உயிரியல் மற்றும் வரலாற்று ரீதியிலான பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை யாகும்.
  • இதில் – வெள்ளை வல்லூறு (பால்கோ ஜக்கர்), இராசாளிக் கழுகு (பால்கோ பெரெக்ரைன்ஸ்), மற்றும் இராசாளி பருந்து (அக்விலா ஃபேசியாட்டா) ஆகிய 3 முக்கிய வேட்டையாடும் பறவை இனங்களும் அடங்கும்
  • இந்தக் கிராமத்தில் பல்வேறு மிகப்பெருங்கற்காலக் கட்டமைப்புகள், தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள், சமணப் படுக்கைகள் மற்றும் 2200 ஆண்டுகள் பழமையான குடைவறைக் கோயில்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்