1741 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொலச்சல் என்ற இடத்தில் நடைபெற்ற டச்சு (நெதர்லாந்து) கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான போரில் திருவிதாங்கூர் படைகள் வெற்றி பெற்றன.
கன்னியாகுமரியில் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியை விட்டு வெளியேறிய கார்ல் ஆகஸ்டு டுய்ஜிவென்ஷோட் என்ற ஜெர்மானிய இராணுவ அதிகாரி திருவிதாங்கூர் இராணுவத்தில் இருந்ததாக புதிய சான்றுகள் தெரிவிக்கின்றன.
டச்சுக்காரர்களுக்கு எதிரான கொலச்சல் போரிலும் அவர்களின் தோல்வியிலும் குறிப்பிடத் தக்க பங்கு வகித்தார்.
மார்த்தாண்ட வர்மா மன்னன், கொலச்சல் பகுதியின் முற்றுகை நடவடிக்கை மற்றும் ஐரோப்பியர்களை திருவிதாங்கூர் இராணுவத்தில் வெற்றிகரமாக இணைத்ததில் அவரது சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் டுய்ஜ்வென்ஷோட்டை ஒரு முக்கியத் தளபதியாக நியமித்தார்.
1671 முதல் 1758 ஆம் ஆண்டு வரை லைடன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மார்க் டி லானாய், ‘திருவிதாங்கூர் குலசேகரப் பெருமாள்கள்: திருவிதாங்கூரின் வரலாறு மற்றும் சமஸ்தான உருவாக்கம்’ என்ற நூலில் இத்தகவலை எழுதியுள்ளார்.