TNPSC Thervupettagam
September 1 , 2024 42 days 76 0
  • நாசா நிறுவனமானது, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ஏவுகலத்தினைப் பயன்படுத்தி டானேஜர்-1A என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.
  • கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகியவற்றை மிக அதிகளவில் வெளியிடும் பகுதிகளை இந்த செயற்கைக்கோள் கண்டறியும்.
  • இந்த செயற்கைக்கோள் ஆனது, மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகிய வாயுக்களின் உமிழ்வினை நன்கு கண்காணிக்க வரைபடமாக்கல் நிறமாலை அளவி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும்.
  • மீத்தேன் ஒரு கண்ணுக்குத் தெரியாத ஆனால்  தீவிரமான பசுமை இல்ல வாயுவாகும் என்பதோடு கார்பன் டை ஆக்சைடுக்கு அடுத்தபடியாகப் புவி வெப்பமடைதலுக்கு அதிகளவில் பங்காற்றும் இரண்டாவது வாயுவாகும்.
  • 2022 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, நிலத்தில் காணப்படும் ஓசோனால் பாதிக்கப் படுவது ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் கணக்கிலான மிக முன்கூட்டிய மரணங்களுக்கு வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்