நீண்ட தூர மற்றும் தானே இயங்கும் ஆளில்லா விமானத்தின் பயன்பாட்டை சோதனை செய்வதற்காக, கூகிள் நிறுவனத்துக்குச் சொந்தமான விரைவு விநியோக ஸ்டார்ட்அப் அமைப்பான “டன்ஸோ” மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஆளில்லா விமானங்களை உருவாக்கும் “த்ரோட்டில் விண்வெளி நிறுவனம்” ஆகியவற்றின் பயன்பாடுகளுக்கு இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகமானது (Directorate General of Civil Aviation - DGCA) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல்களானவை, கண்ணுறு ஒளிக்கு அப்பாற்பட்ட ஆளில்லா விமானங்களின் செயல்பாடுகள் என அழைக்கப்படும் DGCAன் சோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன .
நீண்ட தூர ஆளில்லா விமானங்கள் மூலமாக இந்தியாவின் உள்நாட்டில் தளவாட சேவைகள் கணிசமாக மேம்படும் மற்றும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இவை ஏற்படுத்தக் கூடும்.