டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மைக் குறியீடு (Dow Jones Sustainability Index - DJSI) 2018-ன் ‘எஃகு தொழிற்சாலையின் தலைவர்’ (Steel Industry Leader) விருதை டாடா எஃகு நிறுவனம் பெற்றுள்ளது.
DJSI 2018க்கு மதிப்பீடு செய்யப்படும் 60 துறைகளில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே நிறுவனமாக டாடா ஸ்டீல் உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக உலகளவில் 24 எஃகு நிறுவனங்களுள் டாடா நிறுவனமானது “தொழில்தலைவர்” (Industry Leader) எனப் பெயரிடப்பட்டுள்ளது.