TNPSC Thervupettagam

டாக்கா உலகளாவிய உரையாடல்

November 20 , 2019 1739 days 610 0
  • டாக்கா உலகளாவிய உரையாடலின் முதலாவது பதிப்பானது வங்க தேசத்தில் நடத்தப் பட்டது. இது அந்நாட்டின் பிரதமரான ஷேக் ஹசீனா என்பவரால் துவங்கி வைக்கப் பட்டது.
  • இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கான குறிப்பிடத்தக்கப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக 50 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
  • இந்த மாநாடானது புது தில்லியில் உள்ள ”அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்” என்ற அமைப்பு (ORF - Observer Research Foundation) மற்றும் சர்வதேச & உத்திசார் ஆய்வுகளுக்கான வங்க தேச நிறுவனம் (BIISS - Bangladesh Institute of International and Strategic Studies) ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
  • சுற்றுச்சூழல் ரீதியான நிலையான அமைதி மற்றும் செழிப்பை அடைவதற்காக இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இது ஒரு தளமாகச் செயல்பட இருக்கின்றது.
  • கடல்சார் களத்தில் அமைதி மற்றும் நிலைத் தன்மை ஆகியவை ஆசியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஒப்புக் கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்