TNPSC Thervupettagam

டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச சிறப்புத்துவ விருது 2019

September 18 , 2019 1776 days 670 0
  • வங்காள தேசத்தின் பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு டாக்காவில் 2019 ஆம் ஆண்டின் டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச சிறப்புத்துவ விருது  வழங்கப்பட்டது.
  • அமைதியான & வளமான தெற்காசியாவைப் பற்றிய அவருடைய பார்வை மற்றும் இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் அவர் ஆற்றியப்  பங்களிப்பிற்காக  அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவாக நிறுவப்பட்டுள்ளது.
  • தங்களது நாடு சிறந்து விளங்குவதற்காக, தங்களது துறைகளில் சிறப்புத்துவத்தை  வெளிப்படுத்தும் அரசியல் தலைவர்கள் அல்லது தலைவர்களைக் கௌரவிப்பதற்காக  ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகின்றது.
  • இந்த விருதானது  டேல் வியூ என்ற அமைப்பால் வழங்கப்படுகின்றது. இந்த அமைப்பானது அறக்கட்டளை சமூகச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்