டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகச் சட்டத்தினை ரத்து செய்வதற்கான ஒரு மசோதாவினை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இது அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தினை ஓர் ஒருங்கிணைந்த கல்வி நிறுவனம் என்ற நிலையிலிருந்து ஒரு இணை வகைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான 2013 ஆம் ஆண்டின் அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டத்தினைத் திருத்தச் செய்வதற்கான மற்றொரு மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக்கழகமானது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலுள்ள இணைக் கல்லூரிகளை (கலை மற்றும் அறிவியல்) இணைத்து ஓர் இணை வகை கல்லூரியாக மாற்றப்பட உள்ளது.
அரசானது பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டத்தினைத் திருத்துவதற்கான ஒரு மசோதாவினையும் அறிமுகப் படுத்தியுள்ளது.
இதன் விளைவாக பாரதிதாசன் பல்கலைக்கழகமானது இனி மயிலாடுதுறையிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான ஒரு இணைப் பல்கலைக்கழகமாக செயல்படாது.