TNPSC Thervupettagam

டாக்ஸிங் விமான நிலையம் - பெய்ஜிங்கின் மிகப்பெரிய விமான நிலையம்

September 20 , 2019 1800 days 708 0
  • கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சீனாவானது  புதிய பெரிய விமான நிலையத்தை திறக்கவுள்ளது.
  • பெய்ஜிங் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே இருக்கும் உலகின் இரண்டாவது பரபரப்பான பெய்ஜிங் விமான நிலையத்தோடுச் சேர்த்து  கூடுதலாக அமைக்கப்பட உள்ளது.
  • பெய்ஜிங் கேபிடல் சர்வதேச விமான நிலையம் ஆனது 2018 இல் 100 மில்லியன் பயணிகளைக் கையாண்டது.
  • உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் விமான நிலையம் அட்லாண்டாவில் உள்ளது.
  • டாக்ஸிங் விமான நிலையத்தின் வடிவத்திற்கு ‘ஸ்டார்ஃபிஷ்’ என்று புனைப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பானது  பாதுகாப்பு சோதனைகள் மற்றும் வாயில்களுக்கு இடையிலான தூரத்தைக்  குறைக்கிறது.
  • பூகம்பத்தால் பாதிக்கப்படாத இந்த  விமான நிலையத்தின் அடியில் ஒரு ரயில் நிலையமும் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்