இந்தியா சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் விமானநிலையங்களில் பயன்படுத்தப்படும் டாக்ஸிபோட்ஸை வாங்க திட்டமிட்டுள்ளது. இது இஸ்ரேல் விண்வெளி தொழில் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரை இயந்திர மனிதனின் செயல்பாடு விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது விமானம் ஓடுதளத்தின் தொடக்கப் பாதைக்கு வரும் போது மட்டுமே விமானிகள் விமான இயந்திரத்தை இயக்க ஒத்துழைக்கும். எனவே இதன் மூலம் கார்பன் வெளியேற்றமானது குறைக்கப்படும். டாக்ஸிபோட்ஸ்க்காக IAI (Israel Aerospace Industries) ஆனது குருகிராமை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமான கேஎஸ்யூ வான்பயணவியல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த டாக்ஸிபோட்ஸ்களின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்கு5 மில்லியன் மிச்சமாகும். 4 மில்லியன் டன்கள் அளவிலான பசுமை இல்ல வாயுக்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் இதைப் பயன்படுத்துவதன் மூலம் குறையும்.