மும்பையில் நடைபெற்ற 18-வது டாட்டா இலக்கியத் திருவிழாவில் நாடகத் துறைக்கு மிகச் சிறந்த வகையில் பங்காற்றியமைக்காக நடிகர் மற்றும் கதை ஆசிரியரான கிரிஷ் கர்னாடிற்கு 2017-ஆம் ஆண்டிற்கான டாட்டா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு உள்ளது.
இவர் ஞானபீட விருது, பத்ம பூஷன் விருது, மற்றும் பத்ம ஸ்ரீ விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவர் திரையில் அறிமுகமான ”சம்ஸ்காரா“ எனும் திரைப்படமானது குடியரசுத் தலைவரின் கோல்டன் லோட்டஸ் விருதை வென்ற முதல் கன்னட திரைப்படமாகும்.
நாடகங்கள் எழுதுவதில் இவர் பெரும் புகழ் பெற்றவர்.
வங்க எழுத்தாளரான நபநீத தேவ் சென்-னுக்கு Big little Book Award வழங்கப்பட்டுள்ளது.
புனை கதைகளுக்கான ஆண்டின் சிறந்த புத்தக விருது “Son of Thunder Cloud” எனும் நாவலுக்காக நாகாலாந்து எழுத்தாளரான ஈஸ்டெரின் கைர்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
Non-Fiction பிரிவில் பங்கஜ் மிஷ்ராவின் “Age of Anger – A History of the present” என்ற புத்தகத்திற்கு ஆண்டின் சிறந்த புத்தக விருது வழங்கப்பட்டுள்ளது.