அருணாச்சலப் பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ள டாட்டோ-I புனல் மின்னாற்றல் உற்பத்தி நிலையத்திற்காக (HEP) சுமார் 1750 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையம் ஆனது ஷி யோமி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளதோடு மேலும், இதன் பணிகள் 50 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
186 MW (3 x 62 MW) நிறுவப்பட்டத் திறனுடன், டாட்டோ-I HEP நிலையம் ஆண்டுதோறும் 802 மில்லியன் அலகு (MU) மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.