TNPSC Thervupettagam

டானகில் பள்ளம்

November 10 , 2019 1749 days 717 0
  • எத்தியோப்பியாவின் டானகில் பள்ளத்தில் டல்லோல் புவிவெப்ப நீரூற்றுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பள்ளத்தில்  தண்ணீர் உள்ளது. ஆனால் இங்கு எந்தவொரு உயிரினமும் வாழவில்லை.
  • டல்லோல் நிலப் பரப்பானது பல உயர் அமிலத் தன்மை கொண்ட மிகை உப்பு ஏரிகளால் நிரம்பியுள்ளது. இந்த ஏரிகள் பச்சை, மஞ்சள் மற்றும் பிற வண்ணங்களின் நிழல்கள் ஆகியவற்றின் துடிப்பான வண்ணங்களைத் தருகின்றன.
  • இந்த நரக, உப்பு நீர் ஏரியானது பூமியில் மக்கள் வசிக்கும் மிக அதிகமான வெப்பமான இடமாக பொதுவாகக் கருதப்படுகின்றது.

இதுபற்றி

  • டானகில் பள்ளமானது ஆனது எத்தியோப்பியாவில் உள்ள ஆஃபர் முக்கோணப் பகுதி அல்லது ஆஃபர் பள்ளத்தின் வடக்குப் பகுதியாகும்.
  • டானகில் பள்ளமானது மூன்று புவியடுக்குத் தகடுகளின் சந்திப்புப் பகுதியில் (முச்சந்திப்பு) அமைந்துள்ளது. இது ஒரு சிக்கலான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது.
  • ஆப்பிரிக்காவும் ஆசியாவும் விலகிச் சென்றதன் விளைவாக இது வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் பிளவு மற்றும் எரிமலைச் செயல்பாடு அங்கு ஏற்படுகின்றது.
  • ஆண்டு முழுவதும் நிலவும் சராசரி வெப்பநிலையைப் பொறுத்தவரை பூமியின் வெப்பமான இடம் டானகில் பள்ளம் ஆகும்.
  • இது பூமியில் உள்ள மிகத் தாழ்வான இடங்களில் ஒன்றாகும். மேலும் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் இங்கு மழை இல்லாமல் காணப் படுகின்றது.
  • இப்பகுதி பெரும்பாலும் “மனித குலத்தின் தொட்டில்” என்றும் குறிப்பிடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்