TNPSC Thervupettagam
February 14 , 2019 1994 days 611 0
  • இஸ்ரேலின் மிகப்பெருமை வாய்ந்த டான் டேவிட் பரிசினை இந்த வருடம் மிகப் புகழ்பெற்ற இந்திய வரலாற்று ஆசிரியரான சஞ்சய் சுப்ரமணியம் வென்றிருக்கின்றார்.
  • இந்த விருது, முந்தைய நவீன யுகத்தில் ஆசியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் வடக்கு தெற்கு அமெரிக்க மக்கள் ஆகியோரிடையே ஏற்பட்ட கலாச்சார மோதல்களின் மீதான அவரது படைப்புக்காக அளிக்கப்பட்டது.
  • அவர் பெரு வரலாற்றில் “கடந்த கால பரிமாணம்” என்னும் பிரிவில் தனது படைப்பிற்காக இவ்விருதை வென்றுள்ளார்.
  • அவர் இப்பிரிவில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கென்னத் போமிரான்ஸ் என்பவருடன் பகிர்ந்து கொள்கிறார்.
சர்வதேச டான் டேவிட் பரிசு
  • டான் டேவிட் பரிசு என்பது டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைத் தலைமையகமாகக் கொண்ட டான் டேவிட் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டு சர்வதேச முயற்சி ஆகும்.
  • இப்பரிசு ஒவ்வொரு வருடமும் மனிதனின் கடந்த, நிகழ்கால மற்றும் எதிர்காலத்திய சாதனைகளைக் குறிப்பிடும் துறைகளில் அவர்கள் மேற்கொண்ட உன்னதமான அறிவியல்பூர்வ, தொழில்நுட்ப மற்றும் மனிதாபிமான சாதனைகளுக்காக வழங்கப்படுகிறது.
  • ஒவ்வொரு வருடமும் மூன்று டான் டேவிட் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்