TNPSC Thervupettagam

டான்போ கலை – கேரளா

December 5 , 2019 1692 days 697 0
  • கேரளாவில் முற்போக்குத் தன்மையுள்ள விவசாயி ஒருவர் 1976 ஆம் ஆண்டில் இறந்த புகழ்பெற்ற குருவாயூர் கோயில் யானையைச் சித்தரிப்பதற்காக டான்போ கலையை (ஒரு முப்பரிமாண கலை வடிவம்) பயன்படுத்துகின்றார்.
  • கிருஷ்ணா காமோட், காந்தகாசலா மற்றும் ஜீரகாசலா போன்ற பல உள்நாட்டு வகை அரிசியைப் பயன்படுத்தி இந்த உருவத்திற்கு அந்த விவசாயி வடிவம் கொடுத்தார்.
  • டான்போ கலை என்பது ஜப்பானில் உள்ள இனகடேட் கிராமத்தின் விவசாயிகளால் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் நெல் வயல்களை அழகுபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நெல் பயிர்க் கலையாகும்.
  • நெல் பயிர்களை வளர்ப்பதன் மூலம் மோனாலிசா உள்ளிட்ட புகழ்பெற்ற ஓவியங்களின் பிரம்மாண்டமான பிரதிகளை வெவ்வேறு வண்ணங்களின் நெறிகளுடன் இவர்கள் வரைகின்றார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்