இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கைக் குழு அல்லது CERT-IN ஆனது ஆண்ட்ராய்டு தீநிரலுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.
'டாம்', எனப்படும் தீநிரல் கைபேசிகள் போன்ற ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஊடுருவி, அழைப்புப் பதிவுகள், தொடர்புகள், வரலாறு மற்றும் ஒளிப்படப் பதிவுகள் போன்ற பல பயனர்களின் முக்கியமானத் தரவுகளை முடக்குவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
இந்த தீநிரல் ஆனது, "தீம்பொருள் எதிர்ப்பு நிரல்களையும் தவிர்த்து, இலக்கு வைக்கப் பட்டச் சாதனங்களில் பணயத் தீநிரல்களை நிறுவும்" திறன் கொண்டது.
இது நம்பத்தகாத / தெரியாத மூல ஆதாரங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மூன்றாம் தரப்பு இணைய தளங்கள் அல்லது சில செயலிகள் மூலம் பரவச் செய்யப் படுகிறது.