டார்க்கெட் ஒலிம்பிக் அரங்க திட்டத்தின் (Target Olympic Podium Scheme – TOPS) ஒரு முதன்மைக் குழுவில் ஐந்து விளையாட்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அவர்கள்,
டென்னிஸ் வீரரான அங்கிதா ரைனா,
மல்யுத்த வீரர்களான சுமீத் மாலிக் மற்றும் சீமா பிஸ்லா மற்றும்
படகுப் போட்டி வீரர்களான அர்விந்த் சிங் மற்றம் அர்ஜுன் லால் ஜாத்
இந்தத் திட்டமானது 2014 ஆம் ஆண்டில் இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டமானது 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் இதர சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு இந்தியாவின் முன்னனி விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவியினை வழங்குகிறது.