TNPSC Thervupettagam

டார்னியர் 228

December 28 , 2017 2526 days 786 0
  • ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL- Hindustan Aeronautics Ltd) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள டார்னியர் 228 வகை விமானங்களை  குடிமை சேவைகளுக்கான (Civilian Flights) விமானங்களாகப் பயன்படுத்த மத்திய  சிவில் விமான போக்குவரத்திற்கான பொது  இயக்குநரகம் (Directorate General of Civil Aviation-DGCA) அனுமதியளித்துள்ளது.
  • இதுவரையில் இந்த விமானம் பாதுகாப்புப் படைகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
  • மேலும் குடிமை சேவைகளுக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் இதுவேயாகும்.
  • இந்த உத்தரவின் மூலம் HAL தனது டார்னியர் 228 விமானங்களை இந்தியாவில்  விமானப்போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு விற்க இயலும். அதனால்  இந்த விமானங்களை  மத்திய அரசின்  பிராந்திய இணைப்பிற்கான    விமானப் போக்குவரத்துத்  திட்டமான “உடான்” (UDAN)  திட்டத்திற்கு   பயன்படுத்த இயலும்.
  • டார்னியர் 228 விமானங்கள் மிகவும் பல்துறை (versatile) பல்நோக்கு பயன்பாடுடைய (multi-purpose) ஓர் இலகுரக (light) போக்குவரத்து விமானங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்