ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL- Hindustan Aeronautics Ltd) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள டார்னியர் 228 வகை விமானங்களை குடிமை சேவைகளுக்கான (Civilian Flights) விமானங்களாகப் பயன்படுத்த மத்திய சிவில் விமான போக்குவரத்திற்கான பொது இயக்குநரகம் (Directorate General of Civil Aviation-DGCA) அனுமதியளித்துள்ளது.
இதுவரையில் இந்த விமானம் பாதுகாப்புப் படைகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
மேலும் குடிமை சேவைகளுக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் இதுவேயாகும்.
இந்த உத்தரவின் மூலம் HAL தனது டார்னியர் 228 விமானங்களை இந்தியாவில் விமானப்போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு விற்க இயலும். அதனால் இந்த விமானங்களை மத்திய அரசின் பிராந்திய இணைப்பிற்கான விமானப் போக்குவரத்துத் திட்டமான “உடான்” (UDAN) திட்டத்திற்கு பயன்படுத்த இயலும்.
டார்னியர் 228 விமானங்கள் மிகவும் பல்துறை (versatile) பல்நோக்கு பயன்பாடுடைய (multi-purpose) ஓர் இலகுரக (light) போக்குவரத்து விமானங்களாகும்.