இந்தத் தினமானது 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் ஆண்டில் சார்லஸ் டார்வின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
சார்லஸ் டார்வின் அவர்கள் ஒரு பிரிட்டிஷ் இயற்கையியலாளர், புவியியலாளர் மற்றும் உயிரியலாளர் ஆவார் என்பதோடு அவர் பரிணாம உயிரியலின் தந்தையாகவும் அறியப் பட்டவர் ஆவார்.
இத்தினமானது அறிவியலுக்கான அவரது பங்களிப்பையும், அறிவியல் வளர்ச்சிகளை மேம்படுத்த உத்வேகம் பெறுவதையும் எடுத்துக் காட்டுகிறது.
1859 ஆம் ஆண்டில், டார்வின் தனது முதன்மை படைப்பான "On the Origin of Species" என்ற புத்தகத்தினை வெளியிட்டார்.
இது அவரது கோட்பாட்டை விரிவாக எடுத்துரைக்கச் செய்ததோடு, அதை ஆதரிக்கத் தேவையான ஆதாரங்களையும் முன்வைத்தது.