TNPSC Thervupettagam

டாலர் ஆதிக்கத்தில் சரிவு

March 29 , 2022 973 days 453 0
  • உலகப் பண இருப்பில் டாலரின் பங்கானது கடந்த 20 ஆண்டுகளாக ஒரு நிலையான சரிவைக் கண்டுள்ளது.
  • மத்திய வங்கிகள் தங்களது பங்குகளைப் பன்முகப்படுத்த ரென்மின்பி உள்ளிட்ட மரபு சாரா பணங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதே இதற்குக் காரணமாகும்.  
  • இருப்பு மேலாண்மை நிறுவனங்கள் டாலருக்குப் பதிலாக இருவேறு திசைகளில் ஒரு கால்பகுதியினை ரென்மின்பியை நோக்கியும் மற்ற 3 கால்பகுதிகளை சிறு நாடுகளின் பணங்களை நோக்கியும் நகர்த்தும் வகையில் திரும்பியுள்ளன.
  • டாலர் ஆதிக்கத்தின் மறைமுகமானச் சரிவு : செயல்பாட்டிலுள்ள பன்முகப்படுத்தல் அமைப்புகள் மற்றும் மரபுசாரா இருப்பு பணங்களின் எழுச்சி என்று தலைப்பிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வறிக்கையில் இத்தகவலானது தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்த ஆய்வறிக்கையினைச் சர்வதேச நாணய நிதியத்தின் சேர்கான் அர்சலான்சல்ப், கலிபோர்னியாவின் பெர்க்கிலி  பல்கலைக்கழகத்தின் பேரி எய்சென்கிரீன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிமா சிம்சன் ஆகியோர் இணைந்துத் தயாரித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்