ஜம்மு & காஷ்மீர் நிர்வாகமானது முன்னாள் கடற்படை அதிகாரியான S.K. ஜா என்பவரை டால்-நஹீன் ஏரியில் விரிவான ஆழ அளவியல் ஆய்வு மேற்கொள்வதற்கான ஆலோசகராக நியமித்துள்ளது.
ஆழ அளவியல் ஆய்வு என்பது பெருங்கடல் அல்லது ஏரியின் நீருக்கடியிலான ஆழத்தைப் பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வாகும்.
ஸ்ரீநகரிலுள்ள நஹீன் ஏரியானது டால் ஏரியிலிருந்து பிரியும் ஆழமான நீல ஏரியாகும்.
இந்த நஹீன் ஏரியானது அதிக அளவிலான வில்லோ மற்றும் போப்லர் மரங்களால் சூழப்பட்டுள்ளது. எனவே இது “The jewel in the ring” அல்லது வளையத்தில் உள்ள அணிகலன் என பொருள்படும் விதத்தில் நஹீனா என்றழைக்கப்படுகிறது.