TNPSC Thervupettagam

டாவின்சி+ மற்றும் வெரிட்டாஸ்

June 6 , 2021 1178 days 537 0
  • நாசா நிறுவனமானது டாவின்சி+ மற்றும் வெரிட்டாஸ் எனும் இரண்டு புதிய மனித எந்திர ஆய்வுத் திட்டங்களை அறிவித்துள்ளது.
  • இவை வெள்ளிக் கிரகத்தைப் பற்றிய ஆய்வினை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட உள்ளன.
  • இவை 2028 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணில் ஏவப்படும்.
  • டாவின்சி+ என்றால் வெள்ளி கிரகத்தின் நல்லியல்பு வாயு, வேதியியல் பற்றிய ஆழ் வளிமண்டல ஆய்வு மற்றும் புகைப்படமிடல்என்பதாகும் (Deep Atmosphere Venus Investigation of Noble gases, Chemistry and Imaging – Davinci+).
  • இது வெள்ளி கிரகத்தின் வளிமண்டலத்தினை அளவிடும்.
  • மேலும் வெள்ளிக் கிரகத்தில் முன்பு எப்போதாவது பெருங்கடல் இருந்ததா எனவும் இது ஆய்வு செய்ய உள்ளது.
  • வெரிட்டாஸ் என்றால்வெள்ளி கிரகத்தின் உமிழ்வுத்திறன், ரேடியோ அறிவியல், InSAR, நில அமைப்பு மற்றும் நிறப்பிரிகை பற்றிய ஆய்வு” (Venus Emissivity, Radio Science, InSAR, Topography and Spectroscopy – Veritas) என்பதாகும்.
  • இது வெள்ளி கிரகத்தின் புவியியல் சார்ந்த வரலாற்றினைப் புரிந்து கொள்வதற்காக வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பினை வரைபடமாக்கும்.
  • அங்கு எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலநடுக்கங்கள் இன்னும் ஏற்படுகின்றனவா என்பதையும் இது கண்டறியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்