சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வருடாந்திர உலகப் பொருளாதார மன்ற உச்சி மாநாட்டின் 53வது பதிப்பு நடைபெற்றது.
இதன் கருப்பொருள் ‘பிளவுபட்ட உலகில் ஒத்துழைப்பு' என்பதாகும்.
இந்நிகழ்வில் தலைமைப் பொருளாதார நிபுணர் கண்ணோட்ட அறிக்கை தொடங்கப் பட்டது.
காலநிலை தொடர்பான வர்த்தக அமைச்சர்களின் புதிய கூட்டணி தொடங்கப்பட்டது.
இது காலநிலை, வர்த்தகம் மற்றும் நிலையான வளர்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்க 50 நாடுகளை ஒன்றிணைத்தது.
காலநிலை நெருக்கடிக்கான நிதியை உருவாக்க, புரவலர்கள் முறை மூலதனத்தைப் பயன்படுத்துவதற்காக, புவிப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பெருக்குவதற்கான ஒரு புதிய முயற்சி (GAEA) தொடங்கப்பட்டது.
இது 45க்கும் மேற்பட்ட பெரியப் புரவலர்கள், பொது மற்றும் தனியார் துறைப் பங்காளர்களால் ஆதரிக்கப்படும் ஒரு புதிய முயற்சியாகும்.
உலகளாவிய ஒத்துழைப்பு கிராமம் என பெயரிடப்பட்ட அதன் சொந்த மெட்டாவர்ஸ் தளத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் கண்டுபிடிப்புகளுக்கானக் கூட்டணி (CEPI) தொற்றுநோய்க்கானப் பதில் நடவடிக்கைகளுக்கு என ஒரு புதிய 100 நாள் இலக்கை நிர்ணயித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு நார்வே மற்றும் இந்திய அரசாங்கங்கள், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் உலகப் பொருளாதார மன்றம் ஆகியவற்றால் தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோய்க்கு எதிரான பிற உயிரியல் எதிர் நடவடிக்கைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த இந்த CEPI தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு இந்தியா - உலகப் பொருளாதார மன்ற ஒத்துழைப்பின் 36வது ஆண்டு ஆகும்.
‘இந்தியா@100 : 26 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தின் திறனை உணர்தல்’ எனும் ஒரு அறிக்கை, உச்சி மாநாட்டின் இணை நிகழ்வாக இந்தியாவால் வெளியிடப் பட்டது.
இந்த அறிக்கையின்படி, நாட்டின் சுதந்திரத்தின் 100வது ஆண்டான 2047 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 26 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும்.
மகாராஷ்டிரா மாநில அரசு, நகர மாற்றத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உத்திகளைப் பெற உலகப் பொருளாதார மன்றத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தெலுங்கானா அரசு உயிர் அறிவியல் மையம் மற்றும் சுகாதார மையத்தைப் பெறச் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மற்ற முயற்சிகள்
ஃபயர்ஆல்ட் முயற்சி - இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் காட்டுத்தீயை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு முன்முயற்சியில் இணையத் தாங்குதிறன் - எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களைப் பாதுகாப்பதற்கான இணைய தீர்வுகளைக் கண்டறிய இந்த முயற்சி செயல்படும்.