TNPSC Thervupettagam

டாவோஸ் உச்சி மாநாடு 2023

January 28 , 2023 541 days 352 0
  • சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வருடாந்திர உலகப் பொருளாதார மன்ற உச்சி மாநாட்டின் 53வது பதிப்பு நடைபெற்றது.
  • இதன் கருப்பொருள்  ‘பிளவுபட்ட உலகில் ஒத்துழைப்பு' என்பதாகும்.
  • இந்நிகழ்வில் தலைமைப் பொருளாதார நிபுணர் கண்ணோட்ட அறிக்கை தொடங்கப் பட்டது.
  • காலநிலை தொடர்பான வர்த்தக அமைச்சர்களின் புதிய கூட்டணி தொடங்கப்பட்டது.
  • இது காலநிலை, வர்த்தகம் மற்றும் நிலையான வளர்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்க 50 நாடுகளை ஒன்றிணைத்தது.
  • காலநிலை நெருக்கடிக்கான நிதியை உருவாக்க, புரவலர்கள் முறை மூலதனத்தைப் பயன்படுத்துவதற்காக, புவிப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பெருக்குவதற்கான ஒரு புதிய முயற்சி (GAEA) தொடங்கப்பட்டது.
  • இது 45க்கும் மேற்பட்ட பெரியப் புரவலர்கள், பொது மற்றும் தனியார் துறைப் பங்காளர்களால் ஆதரிக்கப்படும் ஒரு புதிய முயற்சியாகும்.
  • உலகளாவிய ஒத்துழைப்பு கிராமம் என பெயரிடப்பட்ட அதன் சொந்த மெட்டாவர்ஸ் தளத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
  • தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் கண்டுபிடிப்புகளுக்கானக் கூட்டணி (CEPI) தொற்றுநோய்க்கானப் பதில் நடவடிக்கைகளுக்கு என ஒரு புதிய 100 நாள் இலக்கை நிர்ணயித்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு நார்வே மற்றும் இந்திய அரசாங்கங்கள், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் உலகப் பொருளாதார மன்றம் ஆகியவற்றால் தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோய்க்கு எதிரான பிற உயிரியல் எதிர் நடவடிக்கைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த இந்த CEPI தொடங்கப்பட்டது.
  • இந்த ஆண்டு இந்தியா - உலகப் பொருளாதார மன்ற ஒத்துழைப்பின் 36வது ஆண்டு ஆகும்.
  • ‘இந்தியா@100 : 26 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தின் திறனை உணர்தல்’ எனும் ஒரு அறிக்கை, உச்சி மாநாட்டின் இணை நிகழ்வாக இந்தியாவால் வெளியிடப் பட்டது.
  • இந்த அறிக்கையின்படி, நாட்டின் சுதந்திரத்தின் 100வது ஆண்டான 2047 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 26 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும்.
  • மகாராஷ்டிரா மாநில அரசு, நகர மாற்றத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உத்திகளைப் பெற உலகப் பொருளாதார மன்றத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • தெலுங்கானா அரசு உயிர் அறிவியல் மையம் மற்றும் சுகாதார மையத்தைப் பெறச் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மற்ற முயற்சிகள்

  • ஃபயர்ஆல்ட் முயற்சி - இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் காட்டுத்தீயை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எண்ணெய் மற்றும் எரிவாயு முன்முயற்சியில் இணையத் தாங்குதிறன் - எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களைப் பாதுகாப்பதற்கான இணைய தீர்வுகளைக் கண்டறிய இந்த முயற்சி செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்