டிஎன்ஏ தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் (உபயோகம் மற்றும் பயன்பாடு) மசோதா 2018 க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குற்றவியல் விசாரணை மற்றும் நீதித் தீர்வுக்காகப் பயன்படுத்தப்படும் டிஎன்ஏ, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்படும் மரபணுத் தகவல்களை சேகரித்து வைக்க அனுமதித்தல் மற்றும் அந்தத் தகவல்களை வைத்து தவறாக பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வசதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்துதல் இம்மசோதாவின் முதன்மை நோக்கங்களாகும்.
இம்மசோதா நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட மற்றும் அடையாளம் தெரியாத இறந்த உடல்களை மற்றவர்களுடன் பொருந்திப் பார்த்து அடையாளம் காண வழி செய்யும்.