சண்டிகரில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் (Central Forensic Science Laboratory - CFSL) ஒரு அதிநவீன டிஎன்ஏ பகுப்பாய்வு மையத்தை மத்திய உள்துறை அமைச்சகம் துவக்கியுள்ளது.
இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தடயவியல் டிஎன்ஏ பகுப்பாய்வு ஆய்வகமானது நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் நிறுவப் பட்டுள்ளது.
தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகமானது (Directorate of Forensic Science services - DFSS) மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றது.