TNPSC Thervupettagam
November 11 , 2019 1722 days 648 0
  • 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையருமான திருநெல்லாய் நாராயண ஐயர் சேஷன் காலமானார்.
  • இவர் முன்னதாக 1989 ஆம் ஆண்டில் இந்தியாவின் 18வது அமைச்சரவைச் செயலாளராகவும் பணியாற்றி  இருந்தார்.
  • 1990 ஆம் ஆண்டில் சந்திரசேகர் பிரதமராக இருந்த போது இவர் இந்தியத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார்.
  • திரு. சேஷனின் காலகட்டத்தில் தான் தேர்தல் ஆணையம் அக்டோபர் 1993 ஆம் ஆண்டில் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாறியது.
  • ஒரு கடமை தவறாத தலைமைத் தேர்தல் ஆணையராக அறியப்பட்ட இவர் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் போட்டியாளர்கள் மீது தேர்தல் ஒழுக்கத்தை அமல்படுத்தியவர் ஆவார். குறிப்பாக தேர்தல் மாதிரி நடத்தை விதிகளில் அவர் மிகுந்த கண்டிப்பு காட்டினார்.
  • அவர் நடைமுறைப் படுத்திய சில சீர்திருத்தங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துதல், தகுதியான அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்குதல், தேர்தல் வேட்பாளர்களின் செலவினங்களைக் கட்டுப்படுத்துதல், தேர்தல்களை எதிர்கொள்ளும் மாநிலங்களைத் தவிர வேறு மாநிலங்களில் இருந்து தேர்தல் அதிகாரிகளை நியமித்தல் ஆகியவை அடங்கும்.
  • வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுப்பது அல்லது மிரட்டுவது, தேர்தல்களின் போது மதுபானம் விநியோகித்தல், அரசாங்க நிதி மற்றும் நிர்வாகத்தை தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துதல், வாக்காளர்களிடம் சாதி அல்லது வகுப்புவாத ரீதியிலான உணர்வுகளில் பிரச்சாரம் செய்தல், பிரச்சாரங்களுக்கு வழிபாட்டுத் தங்களைப் பயன்படுத்துதல், எழுதப்பட்ட முன் அனுமதி பெறாமல் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துதல் & அதிக அளவு இசை வைத்து இடையூறு ஏற்படுத்துதல் போன்ற பல முறைகேடுகளை அவர் கட்டுப்படுத்தினார்.
  • இவருக்கு 1996 ஆம் ஆண்டில் ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது.
  • கடந்த 50 ஆண்டுகளில் 1990 ஆம் ஆண்டு  முதல் 1996 ஆம் ஆண்டு  வரை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியை வகித்தவர் திரு. சேஷன் மட்டுமே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்