ஏர்டெல் பணவழங்கீட்டு வங்கியானது “டிஜிகோல்டு” எனும் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
இது வாடிக்கையாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்யும் ஒரு டிஜிட்டல் தளமாகும்.
இந்தத் திட்டமானது டிஜிட்டல் கோல்டு வழங்கும் ‘சேஃப் கோல்டு’ என்ற ஒரு நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
டிஜிகோல்டின் உதவியுடன் ஏர்டெல் பணவழங்கீட்டு வங்கியின் சேமிப்புக் கணக்கினை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ‘ஏர்டெல் தேங்க்ஸ்’ என்ற ஒரு செயலியைப் பயன்படுத்தி 24 கேரட் தங்கத்தில் முதலீடு செய்ய இயலும்.
மேலும் அதன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பண வழங்கீட்டு வங்கியில் சேமிப்புக் கணக்கினை வைத்துள்ள தங்களது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் டிஜிகோல்டினைப் பரிசாக அளிக்க இயலும்.