இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) இணைய வெளிக் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் எண்ணிம இந்தியா நம்பகத்தன்மைச் சரிபார்ப்பு முகமை (DIGITA) எனப் படும் ஒரு புதிய செயற்கருவியைப் பரிசீலித்து வருகிறது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த முகமையானது, முறையானவற்றைச் சரிபார்த்து, பொதுப் பதிவேட்டை உருவாக்குவதன் மூலம் சட்டவிரோதக் கடன் செயலிகளின் அதிகரிப்பை குறைப்பதை இலக்காகக் கொள்ளும்.
எண்ணிம கடன் செயலிகளைச் சரிபார்ப்பதற்கான ஒரு முக்கிய மையமாக DIGITA செயல்படும்.
இந்த சரிபார்ப்பு செயல்முறையானது அந்தச் செயலிகள் பல்வேறு விதிமுறைகளுக்கு இணங்குவதையும் நெறிமுறைப் படி செயல்படுவதையும் உறுதி செய்யும்.
சரிபார்க்கப்பட்டச் செயலிகள் மட்டுமே "DIGITA-அங்கீகரிக்கப்பட்டவை" என்ற இந்த முத்திரையைப் பெறும் என்பதால் இதன் மூலம் பயனாளிகள் - கடன் வாங்குபவர்கள் - எளிதாக அவற்றை அடையாளம் காண முடியும்.