TNPSC Thervupettagam

டிஜிட்டல் சமூக தினம் - அக்டோபர் 17

October 26 , 2019 1800 days 430 0
  • அக்டோபர் 17 ஆம் தேதியை டிஜிட்டல் சமூக தினமாக இந்தியா  கொண்டாடுகின்றது.
  • 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று இந்தியாவில் டிஜிட்டல் சமூகத்தின் முதலாவது சட்டமான தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 ஆனது அறிவிக்கப்பட்டதிலிருந்து அக்டோபர் 17 ஆனது இந்தியாவில் டிஜிட்டல் சமூகத்திற்கு முக்கியமான தினமாக  விளங்குகின்றது.
  • இந்த அறிவிப்பானது நாட்டில் முதன்முறையாக மின்னணு ஆவணங்களுக்கு ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்தது.
  • மேலும் இது டிஜிட்டல் கையொப்பங்கள் மூலம் மின்னணு ஆவணங்களை உறுதிப்படுத்த சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறையையும் வழங்குகின்றது.
  • கூடுதலாக, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 ஆனது இணையவழிக் குற்றங்களை அங்கீகரித்தது. இது இணையவழிக் குற்றங்களுக்கு விரைவாக குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறையையும் பரிந்துரைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்