TNPSC Thervupettagam

டிஜிட்டல் தரக் குறியீடு 2023

September 22 , 2023 429 days 504 0
  • இணையப் பாதுகாப்பு நிறுவனமான சர்ப்ஷார்க், டிஜிட்டல் வாழ்க்கைத் தரக் குறியீட்டினை (DQL) வெளியிட்டுள்ளது.
  • இந்த வருடாந்திர ஆய்வானது உலகம் முழுவதும் 121 நாடுகளை தர வரிசைப் படுத்துகிறது.
  • இந்தப் பட்டியலில் பிரான்சு முதலிடத்திலும், பின்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா 52வது இடத்தில் உள்ளது.
  • ஆசியாவில், இந்தியா 13வது இடத்தைப் பிடித்துள்ளது. பிராந்திய அளவில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் இணையத் தரம் ஆனது உலகளவில் 16வது இடத்திலும் உலக சராசரியை விட 36 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.
  • இந்தியா இணைய அணுகளில் 28வது இடத்திலும், இணைய வழி அரசாங்கத்தில் 35வது இடத்திலும், இணைய வெளிப் பாதுகாப்பில் 66வது இடத்திலும் உள்ளது.
  • ஆனால் இந்தியா இணைய உள்கட்டமைப்பில் சவால்களை எதிர்கொண்டு 91வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்