இந்திய ரிசர்வ் வங்கியானது 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான செயல்முறைகளை எடுத்துக் காட்டும் வகையில் “இந்தியாவின் பண வழங்கீடுகள் மற்றும் தீர்வு அமைப்புகளுக்கான” தனது தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
இந்தத் தொலைநோக்கு ஆவணத்தின் முக்கியக் கருத்துருவானது, “விதிவிலக்கான மின்னணு பணவழங்கீடுகள் அனுபவத்தை மேம்படுத்துதல்” என்பதாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியானது பணத்தை அதிகம் பயன்படுத்தாமல் டிஜிட்டல் முறையை அதிகம் பயன்படுத்தும் ஒரு சமூக நிலையை அடைவதற்குத் திட்டமிட்டுள்ளது.
இது தொலைநோக்குப் பார்வைக் காலத்தில் யுபிஐ/ஐஎம்பிஎஸ் போன்ற பணவழங்கீடுகள் அமைப்புகளில் சராசரி வருடாந்திர வளர்ச்சி 100 சதவிகிதம் அடைவதையும் NEFT மூலம் 40 சதவிகிதம் பணப் பரிமாற்றம் நிகழ்வதையும் எதிர்பார்க்கின்றது.
இது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் 2,069 கோடி டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 8,707 கோடியாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
பணவழங்கீட்டு அமைப்புகள் தொலைநோக்குப் பார்வை – 2021 ஆனது ஒரு குறிப்பிட்ட செயல் திட்டங்களையும் 12 குறிப்பிட்ட தீர்வுகளையும் கொண்டுள்ளது.