TNPSC Thervupettagam

டிஜிட்டல் பணம் செலுத்துதல் மீதான பணம் மீளப்பெறல்

August 5 , 2018 2305 days 795 0
  • ரூபே மற்றும் பீம் தளங்கள் மூலம் வர்த்தகர் – நுகர்வோர் ஆகியோர் பரிமாற்றம் செய்வதன் மூலம் செலுத்திய சரக்கு மற்றும் சேவை வரியில் 20 சதவீதம் மீளப்பெறல் முறையில் நுகர்வோருக்கு திருப்பி அளிக்கப்படும். இச்சலுகை சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்படவுள்ளது. இம்முடிவு சமீபத்தில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி (GST – Goods and Services Tax) ஆணையக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
  • பணம் மீளப்பெறல் சலுகையானது ஒவ்வொரு பரிமாற்றத்தின் போதும் ரூ.100 வரையிலான தொகையை நுகர்வோருக்கு திருப்பி அளிப்பதாகும்.
  • டிஜிட்டல் சலுகை அளிக்கும் இப்புதிய சோதனைத் திட்டத்தில் உத்திரப் பிரதேசம், பிகார், மஹாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்