TNPSC Thervupettagam

டிஜிட்டல் பணவழங்கீட்டு முறையில் இந்தியா முன்னணி

April 8 , 2021 1329 days 599 0
  • ஐக்கிய ராஜ்ஜியத்தில் (UK) அமைந்துள்ள பணவழங்கீட்டு அமைப்பு நிறுவனமான ACI என்ற நிறுவனமானது டிஜிட்டல் பணவழங்கீட்டு முறை பற்றிய ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
  • இவ்வறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில், இந்தியா அதிக எண்ணிக்கையிலான நிகழ்நேர இணையவழிப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது.
  • Paytm. Phonope, Bharatpe, Pine Labs போன்ற தளங்களின் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பணவழங்கீடு மேற்கொள்ளப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒருங்கிணைக்கப்பட்ட பணவழங்கீட்டு இடைமுகத்தின் (UPI – United Payment Interface) மூலம் மேற்கொள்ளப் படும் பரிவர்த்தனைகள் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 18.7% உயர்ந்துள்ளன.
  • 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் UPI பரிவர்த்தனைகள் ரூ.4.25 லட்சம் கோடிகள் ஆகும்.
  • இது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5.05 லட்சம் கோடிகளாகும்.
  • இணையதளப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் சீனா, அமெரிக்கா, தென்கொரியா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் மின்னணு பணப் பரிவர்த்தனைகளின் பங்கு 50% என்ற அளவினை மிஞ்சும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்