ஐக்கிய ராஜ்ஜியத்தில் (UK) அமைந்துள்ள பணவழங்கீட்டு அமைப்பு நிறுவனமான ACI என்ற நிறுவனமானது டிஜிட்டல் பணவழங்கீட்டு முறை பற்றிய ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.
இவ்வறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில், இந்தியா அதிக எண்ணிக்கையிலான நிகழ்நேர இணையவழிப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது.
Paytm. Phonope, Bharatpe, Pine Labs போன்ற தளங்களின் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பணவழங்கீடு மேற்கொள்ளப்படுகிறது.
2021 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒருங்கிணைக்கப்பட்ட பணவழங்கீட்டு இடைமுகத்தின் (UPI – United Payment Interface) மூலம் மேற்கொள்ளப் படும் பரிவர்த்தனைகள் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 18.7% உயர்ந்துள்ளன.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் UPI பரிவர்த்தனைகள் ரூ.4.25 லட்சம் கோடிகள் ஆகும்.
இது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5.05 லட்சம் கோடிகளாகும்.
இணையதளப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் சீனா, அமெரிக்கா, தென்கொரியா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் மின்னணு பணப் பரிவர்த்தனைகளின் பங்கு 50% என்ற அளவினை மிஞ்சும்.