சிறிய மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கியானது பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிவர்த்தனைக்காக ரூ. 10,000 வரை உச்ச வரம்பு கொண்ட பகுதியளவு கட்டுப்படுத்தப் பட்ட முன்செலுத்து கட்டணக் கருவியை (prepaid payment instrument - PPI) அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையானது கட்டணங்கள் மற்றும் தீர்வு முறைகள் சட்டம், 2007ன் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.