சமீபத்திய ஆய்வின் படி, டிஜிட்டல் முறையின் (Paytm, Gpay முதலியன) மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளில் பெங்களூர் முதலிடத்திலும் சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மாநில வாரியான தரவரிசையில், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் டிஜிட்டல் நிதிப் பரிமாற்றம் குறித்த இந்த ஆய்வானது வேர்ல்ட் லைன் நிதிப் பரிமாற்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டது.