TNPSC Thervupettagam

டிஜிட்டல் பிளவு பற்றிய NSOவின் அறிக்கை

September 14 , 2020 1405 days 730 0
  • தேசியப் புள்ளி விவரங்கள் நிறுவனமானது (NSO - National Statistical Organisation) சமீபத்தில் ‘வீட்டுச் சமூக நுகர்வு’ குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • இது 2017-2018 ஆம் ஆண்டிற்கு இடையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் 75வது சுற்று ஆகும்.
  • இது மாநிலங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்கள் மற்றும் வருமானக் குழுக்கள் முழுவதும் டிஜிட்டல் பிளவானது எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

சிறப்பம்சங்கள்

  • 70%க்கும் மேற்பட்ட வீடுகளை உள்ளடக்கி இமாச்சலப் பிரதேசமானது அதிக அளவிலான இணைய ஊடுருவலை (Internet penetration) பெற்றுள்ளது.
  • டெல்லியானது 55% குடும்பங்களை உள்ளடக்கி அதிக இணைய அணுகலைப் பெற்றுள்ளது.
  • கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 20%க்கும் குறைவான இணைய ஊடுருவலே உள்ளது.
  • நாடு முழுவதும் பத்தில் ஒரு வீடு கணினி அணுகலைக் கொண்டுள்ளது.
  • எல்லா வீடுகளிலும் நான்கில் ஒருவரிடம் இணைய இணைப்பு உள்ளது.
  • நகரங்களில் 42% என்ற அளவில் இணையம் இணைக்கப்பட்ட வீடுகள் உள்ளன. அதே சமயம் இந்தியாவில் கிராமப்புறங்களில் 15% வீடுகளில் இணைய இணைப்பு உள்ளது.
  • 5 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 20% பேர் அடிப்படை டிஜிட்டல் அறிவைக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்