TNPSC Thervupettagam

டிஜிட்டல் பொருளாதார அறிக்கை 2019

September 16 , 2019 1804 days 796 0
  • வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCTAD) ‘டிஜிட்டல் பொருளாதார அறிக்கை (DER) 2019’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • DER இதற்கு முன்னர் தகவல் பொருளாதார அறிக்கை என்று அழைக்கப்பட்டது.
  • வளரும் நாடுகளால் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஏற்படும் மதிப்பு உருவாக்கம் மற்றும் பிடிப்புக்கான நோக்கத்தை இது ஆராய்கிறது.
அறிக்கையின் சிறப்பம்சங்கள்
  • சீனாவின் தைவான் மாகாணம், அயர்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில்  தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் துறை மிகப்பெரியது.
  • உலகளாவிய கணினி சேவைகள் துறையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது.
  • வளரும் நாடுகளில் இந்தியா கணினி சேவைத் துறையில்  மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
  • மேலும், 2010 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையின் மதிப்பு கூட்டப்பட்ட பங்கின் வளர்ச்சி அடிப்படையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  • மொத்தச் சேவை ஏற்றுமதியில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப சேவைகளின் பங்கு: சிறந்த 20 நாடுகள், 2017” இல், இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இதில் அயர்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா இத்தகைய சேவைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மிகப்பெரியது ஆகும்.
  • தொலைத் தொடர்பு சேவைகளின் மிகப்பெரிய மூன்று உற்பத்தியாளர்கள் வளரும் நாடுகளான சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்