TNPSC Thervupettagam

டிஜிட்டல் மற்றும் மூலக்கூறுக் கண்காணிப்பு

April 21 , 2020 1554 days 627 0
  • மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனமானது (CDRI - Central Drug Research Institute) பல்வேறு  நோயாளிகளிடமிருந்துப் பெறப்பட்ட கோவிட் – 19 வைரஸ் மாதிரிகளின் திரிபு  வரிசைகளை முறைப்படுத்துவதற்காக கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. 
  • இது “டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு” என்பதின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • தற்பொழுது மூலக்கூறுக் கண்காணிப்பானது எச்ஐவி மருந்து சோதனை, உணவு மூலம் பரவும் தொற்று நோய்கள் மற்றும் காசநோய் ஆகியவற்றில் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.
  • CDRI ஆனது கோவிட் – 19ஐ எதிர்த்துப் போராடுவதற்காக மருந்துகளின் மறுபயன்பாடு குறித்துச் செயல்பட்டு வருகின்றது.
  • மருந்துகளின் மறுபயன்பாடு என்பது புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக இந்த வைரஸிற்குத்  தீர்வுகளைக் கண்டறிவதற்கான ஒரு விரைவான வழியாகும்.
  • மருந்துகளின் மறுபயன்பாடு என்பது சிகிச்சைப் பயன்பாடுகளுக்கு உதவாத தற்பொழுதுள்ள மருந்துகள் குறித்து ஆய்வு செய்யும் ஓர்  உத்தியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்