இந்திய ரிசர்வ் வங்கியானது, "டிஜிட்டல் வங்கி அலகுகளை நிறுவுதல்" குறித்த வழி காட்டுதல்களை வெளியிட்டது.
இது நமது நாட்டின் 75வது சுதந்திரத் தின அமுதப் பெருவிழா தினத்தை (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) நினைவு கூரும் வகையில் அறிவிக்கப்பட்டது.
இந்த வழிகாட்டுதல்கள் உள்நாட்டில் பட்டியலிடப்பட்ட அனைத்து வணிக வங்கிகளுக்கும் (பிராந்திய கிராமப்புற வங்கிகள், பணவழங்கீட்டு வங்கிகள் மற்றும் உள்ளூர் வங்கிகள் தவிர்த்து) பொருந்தும்.
இந்த டிஜிட்டல் வங்கி அலகுகள், டிஜிட்டல் வங்கித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான குறிப்பிட்ட குறைந்தபட்ச டிஜிட்டல் உள்கட்டமைப்பைக் கொண்ட நிலையான சிறப்பு வணிக அலகு/ மையமாக திகழும்.
இது தற்போதுள்ள நிதித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் தனது சேவையை விரிவுபடுத்தும்.