TNPSC Thervupettagam

டிஜிட்டல் வாழ்க்கைத் தரக் குறியீடு 2020

August 27 , 2020 1460 days 611 0
  • இந்தக் குறியீடானது பிரிட்டீஷ் விர்ஜின் தீவில் உள்ள ஒரு மெய்நிகர் தனியார் வலைப் பின்னல் (வலையமைப்பு) வழங்குநரான சர்ப்சார்க்கினால் (Surfshark) தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகியவை முதல் 2 இடங்களிலும் கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
  • இஸ்ரேல் ஆனது குறைந்த செலவில் இணையதளச் சேவையை வழங்குகின்றது.
  • சிங்கப்பூர், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை மின்னணு-அரசு குறிகாட்டிகளில் சிறப்பாகச் செயல்படுகின்றன.
  • ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்சு மற்றும் லித்வேனியா ஆகியவை சிறந்த அளவில் இணையதள பாதுகாப்பை வழங்குகின்றன.
  • சிறந்த தரமான இணையதளச் சேவையானது சிங்கப்பூர், ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளினால் வழங்கப் படுகின்றது.

இந்தியாவின் நிலை

  • இதில் ஒட்டுமொத்தமாக, இந்தியா 57வது இடத்தில் உள்ளது.
  • இந்தியா குறைந்த விலையில் வழங்கப்படும் இணையதள சேவைக்கான குறிகாட்டியில் 9வது இடத்திலும் மின்னணு-அரசுச் சேவையில் 15வது இடத்திலும் உள்ளது.
  • இந்தியா மின்னணு-அரசுச் சேவை குறிகாட்டியில் 15வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தியா இணையதளப் பாதுகாப்பில் மிக மோசமாக செயல்பட்டுள்ளது. இந்தியா இதில் 57வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தியா தரமான இணையதளச் சேவையில் 78வது இடத்தில் உள்ளது. இந்தியா இதில் வங்கதேசம், நேபாளம், நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பின்னால் உள்ளது.
  • மின்னணுக் கட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குப் பின்னால் 79வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்