TNPSC Thervupettagam
December 7 , 2018 2052 days 673 0
  • உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகமானது ஆளில்லா விமானத்தை இயக்குபவருக்கான பதிவுகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
  • இது ‘டிஜிட்டல் ஸ்கை’ என்றழைக்கப்படும் தளம் மூலமாக செய்யப்படும்.
  • டிஜிட்டல் அனுமதியின்றி எந்த ஒரு ஆளில்லா விமானத்தையும் பறப்பதைத் தடுக்கும் விதமாக முதன்முறையாக 'No Permission, No Take-off (NPNT) முறை இதில் செயல்படுத்தப்படுகிறது.
  • நானோ அளவிலான ஆளில்லா விமானங்கள் எவ்வித தடையுமின்றி பறக்கலாம்.
  • மைக்ரோ மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளை இயக்க அதனை இயக்குபவர்கள் மற்றும் விமானிகள் ஆகிய அனைவரும் டிஜிட்டல் ஸ்கை தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • ஆளில்லா விமான இயக்குபவர் உரிமம் (UAOP - Unmanned Aerial Operator’s Permit) மற்றும் பிரத்யேக அடையாள எண் (UIN - Unique Identification Numbers) ஆகியவற்றிற்கான கட்டணங்கள் ‘பாரத் கோஷ் தளம்’ வழியாக ஏற்றுக் கொள்ளப்படும்.
  • ‘பச்சை மண்டலங்கள்’ என்றழைக்கப்படும் பகுதிகளில் பறப்பதற்கு விமானத்தின் நேரம் மற்றும் இடம் ஆகியவற்றின் தகவல்களை தளம் அல்லது செயலி வழியாக அறிவித்தால் மட்டும் போதுமானது.
  • மஞ்சள் மண்டலங்கள் என்றழைக்கப்படும் பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு அனுமதி தேவை மற்றும் சிவப்பு மண்டலங்களில் பறப்பதற்கு விமானங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்