ஐரோப்பிய மத்திய வங்கியானது (ECB – European Central Bank) இலக்கு நோக்கிய உடனடி பணவழங்கீட்டு தீர்வு (TARGET Instant Payment Settlement-TIPS) என்றழைக்கப்படும் புதிய திறன்பேசி செயலியை ரோமில் தொடங்கியுள்ளது.
இது வங்கியின் வேலை நேரத்தைப் பொருட்படுத்தாமல் ஐரோப்பிய மக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் யூரோக்களை சில விநாடிகளில் மாற்றிக் கொள்ள உதவுகிறது.
இந்த TIPS அமைப்பானது ஐரோப்பிய யூனியன் வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த தளமானது ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாட்டின் மத்திய வங்கிகளின் ஒத்துழைப்புடன் பான்கா டி இடாலியா (Banca d’Italia) என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.