டிமோதி சலாமெட் மற்றும் சென்டாயா ஆகியோர் நடித்த அறிவியல் ரீதியான ஒரு புனைவுக் கதையில் உருவான டியூன் திரைப்படம் இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருதில் 6 பிரிவுகளில் விருதினை வென்றுள்ளது.
இந்தத் திரைப்படமானது 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, அவற்றுள் 6 பிரிவுகளில் விருதுகளை வென்றது.
நமித் மல்ஹோத்ரா அவர்களால் இந்த வெற்றி இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கிறது.
இவர் டபுள் நெகடிவ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் ஆவார்.
இந்த படப்பிடிப்புக் கூடம் நிறுவனம் தான் இத்திரைப்படத்திற்கான VFX பணிகளை மேற்கொண்டது.