TNPSC Thervupettagam

டிரக்கோமாவை அகற்றும் முதல் தென்கிழக்கு ஆசிய நாடு

May 25 , 2018 2280 days 690 0
  • உலக சுகாதார நிறுவனம், கண்களில் தொற்றி பரவக்கூடிய பாக்டீரியத் தொற்றான டிரக்கோமாவை நேபாள நாடு ஒழித்திருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
  • இதன் மூலம், கண்பார்வையிழப்பை ஏற்படுத்தும் உலகின் முன்னணி தொற்றாக கருதப்படுகிற டிரக்கோமாவை ஒழித்த WHOவின் தென்கிழக்கு ஆசிய மண்டலத்தின் முதல் நாடாக நேபாளம் உருவாகியுள்ளது.
  • இந்த கண்நோயானது (டிரக்கோமா), 1980களில் நேபாள நாட்டில் தடுக்கக் கூடிய கண்பார்வையிழப்பை ஏற்படுத்தும் இரண்டாவது முன்னணி காரணியாகும்.

  • டிரக்கோமா என்பது, க்ளாமைடியா டிராக்கோமேட்டிஸ் எனும் பாக்டீரியத் தொற்றால் ஏற்படும் கண்நோயாகும். இந்தத் தொற்றானது குறிப்பாக இளம் குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படக்கூடிய ஒன்றாகும்.
  • இந்தியா, 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டிராக்கோமா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதாக அறிவித்துக் கொண்டது. இந்த அறிவிப்பு WHOவின் GET 2020 (Global Elimination of Trachoma by the year 2020) திட்டத்தின் கீழ் WHOவினால் வரையறுக்கப்பட்ட டிராக்கோமா ஒழிப்பு இலக்குகளை இந்தியா அடைந்ததற்குப் பிறகு வெளியானது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்